| |
Jaffna Health Services Department
|
| |
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விடுதி மற்றும் வைத்தியர்களிற்கான விடுதி கட்டடங்கள் திறப்புவிழா- 22.02.2012updated |
ஆதார வைத்தியசாலை சாவகச்சேரியில் புதிதாக அமைக்கப்பட்ட விடுதிக் கட்டடங்கள் மற்றும் வைத்திய அதிகாரிகளுக்கான தங்குமிட விடுதி போன்றன 06.02.2012 அன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வைத்தியசாலையானது சாவகச்சேரிஇ ப10நகரி மற்றும் பளை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக ஏறக்குறைய 100இ000 மக்களுக்கு சேவையாற்றுகிறது. இவ் வைத்தியசாலையின் உள்ளக விடுதியானது 184 நோயாளர்களை பராமரிக்கக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாக முழுமையாக சேதமடைந்து காணப்பட இவ்வைத்தியசாலை மீள கட்டியமைக்கப்பட்டுள்ளது. இவ்வைத்தியசாலையில் இரண்டு விடுதிகள் மற்றும் வைத்திய அதிகாரிகளுக்கான தங்கும் விடுதி போன்றவற்றை பின்லாந்து மற்றும் அயர்லாந்து செஞ்சிலுவைச்சங்கங்களின் நிதி உதவியுடன் கட்டப்பட்டது. மேலும் இவ்விடுதிகளுக்கான உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவையும் இந்நிறுவனங்களால் வழங்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கே. என் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ச உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திரசிறி மற்றம் பல அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
|
|
| |
பொதுச்சுகாதார குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு 31.05.2011updated |
ஜப்பானிய சமூக மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் வட மாகணத்திலுள்ள 100 பொதுச்சுகாதார குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிளும் 285 பொதுச்சுகாதார குடும்பநல உத்தியோகத்தர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் இலங்கையின் சனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் வழங்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கே. என் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ச உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திரசிறி மற்றம் பல அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
|
|
| |
உலக எச்.ஜ.வி/எயிட்ஸ் தினம் டிசம்பர் 01 20.12.2011 |
| உலக எச்.ஜ.வி/ எயிட்ஸ் தினம் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் டிசம்பர் 01 அன்று சொர்ணாம்பிகை மண்டபத்தில் அனு~;டிக்கப்பட்டது. வைத்தியகலாநிதி. ஆ.கேதீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் அவர்களின் தலைமை உரையுடன் ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு திரு. இ.இரவீந்திரன், செயலாளர், சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சு, அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். வைத்திய கலாநிதி (திருமதி) S.R Jude மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடமாகாணம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், வைத்தியகலாநிதி (திருமதி) பா. பசுபதிராஜா, பணிப்பாளர், போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம், வைத்தியகலாநிதி அசோக்குமார் பிரபாத, திட்ட பணிப்பாளர், Hope foundation, தமிழ்நாடு ஆகியோர் விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர். வைத்தியகலாநிதி சி. கணேசலிங்கம் பால்நிலை தொற்றுநோய் பிரிவு தடை வைத்திய அதிகாரி, சுகாதார அமைச்சின் பணிமனை, மாகாண சுகாதார சேவைகள் பணிமனை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். |
|
| |
புதிதாக நியமனம் பெற்ற வைத்திய உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு 16.11.2011 updated |
வடமாகாணத்திற்கென புதிதாக நியமனம் பெற்ற வைத்திய உத்தியோகத்தர்களுடனான அறிமுக நிகழ்வானது.11.2011 அன்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் K.N. டக்ளஸ் தேவானந்தா பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுமுயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர், வடமாகாண கௌரவ. ஆளுனர் ஜீ.ஏ சந்திரசிறி ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
|
|
| |
தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கல் 16.11.2011 updated |
| தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த 14.11.2011 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வடமாகாண கௌரவ. ஆளுனர் ஜீ.ஏ சந்திரசிறி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
170 தாதிய உத்தியோகத்தர்களும் 202 பொது சுகாதார குடும்பநல உத்தியோகத்தர்களுக்குமான நியமனக்கடிதம் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
வடமாகாண பிரதம செயலாளர் திரு. A.சிவசுவாமி, ஆளுனரின் செயலாளரும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமான திரு. L. இளங்கோவன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.R.இரவீந்திரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி (திருமதி)S .R.யட் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
|
|
| |
திறப்பு விழா – பிரதேச வைத்தியசாலை அம்பன். 03.11.2011 updated |
| வெளிநோயாளர் பிரிவு, பிரசவ விடுதி, வைத்தியர் விடுதி, பொது சுகாதார குடும்பநல உத்தியோகத்தர் விடுதி என்பன 21.10.2011 அன்று திறந்து வைக்கப்பட்டது. கௌரவ. மேஜர் ஜெனல், ஜீ.ஏ சந்திரசிறி, ஆளுனர், வடமாகாணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். அதி. மேதகு. Azmi Zainuddin சனநாயக உயர் ஸ்தானிகர், மலேசியா, வைத்திய கலாநிதி. Heng Aki Cheng, மலேசியா ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும், திரு. இரவீந்திரன், செயலாளர், சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சு, வடமாகாணம், வைத்திய கலாநிதி (திருமதி) யட், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வட மாகாணம், திரு. N. திருலிங்கநாதன், உதவி அரசாங்க அதிபர், மருதங்கேணி ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர். |
|
| |
தேசிய சுகாதார வாரம் 03 – 09/10/2011 – ஆரம்ப நிகழ்வு 13.10.2011updated |
| சுகாதார அமைச்சு ஒக்டோபர் 03ம் திகதி முதல் 09 ம் திகதி வரை சுகாதார வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு 03.10.2011 அன்று யாழ்ப்பாணம் சுகாதார திணைக்கள மாகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்;விற்கு வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.இ.ரவீந்திரன் அவர்கள் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தேசிய சுகாதார வார நிகழ்வுகளை ஒழுங்ககமைத்தது.
03.10.2011 : பிரதேசஃ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்ட கலந்துரையாடல்கள்.
04.10.2011 : நிறுவனங்கள்இ பொது இடங்கள் போன்றவற்றில் துப்பரவாக்கல் பணிகளை முன்னெடுத்தல்.
05.10.2011 : பாடசாலை மாணவர்களிற்கான சுகாதார கல்வி அறிவை மேம்படுத்துவதோடு பிரதேச செயலகங்களில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
06.10.2011 : வீடுகள்இ பொது இடங்கள்இ மற்றும் கைவிடப்பட்ட இடங்களில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் பரிசேதனை மேற்கொள்ளல்.
07.10.2011 : ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 30 வயதிற்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம்.
08.10.2011 : வணக்கத்தலங்கள் மற்றும் பொது இடங்களில் பரிசோதனைகளை மேற்கொள்ளல்.
09.10.2011 : ஆதார வைத்தியசாலை பருத்தித்துறைஇ ஆதார வைத்தியசாலை சாவகச்சேரிஇ பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைஇ யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இரத்ததானம் வழங்க ஏற்பாடு செய்தல்.
10.10.2011 : கலாச்சார நிகழ்வும் சுகாதார சேவையாளர்களைக் கௌரவித்தலும்.
|
|
| |
உலக விலங்கு விசர் நோய் தினம் செப்டம்பர் - 28. 25.11.2011updated |
| விலங்கு விசர் நோய் சம்பந்தமான கட்டுப்பாடு, பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக உலக விலங்கு விசர் நோய் தினம் செப்டம்பர் - 28 ம் திகதி உலகளாவியாதியில் கொண்டாடப்படுகிறது. யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, உலக விலங்கு விசர் நோய் தினமான செப்டம்பர் - 28 அன்று தியாகி அறக்கொடை நிதியம், சொர்ணாம்பிகை மண்டபத்தில் ஏற்பாடு செய்தது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.இ.இரவீந்திரன், செயலாளர், சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சு, வடமாகாணம் அவர்களும் கலந்து சிறப்பித்தார். வைத்திய கலாநிதி (திருமதி) S.R யூட், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வட மாகாணம், வைத்திய கலாநிதி (திருமதி) B பசுபதிராஜா, பணிப்பாளர், போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம் அவர்களும் விசேட விருந்தினர்களாக கலந்து கொண்டனர். |
|
| |
நடமாடும் மருத்துவ முகாம் மருததங்கேணி 10.08.2011updated |
| மீள் குடியமர்த்தப்பட்ட மருதங்கேணி பிரதேச வாழ் மக்களிற்கான நடமாடும் மருத்துவ முகாம் 14.07.2011 அன்று மருதங்கேணி தேவாலயத்தில் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமிற்கு கொழும்பு, யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் ஆகியோரால் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நடமாடும் மருத்துவ முகாம் மூலம் ஏறத்தாழ 850 நோயாளர்கள் மருத்துவ சேவையை பெற்றுக்கெண்டனர். பொது மருத்துவம், சிறுவர் மருத்துவம், மகப்பேறு, பல் மருத்துவம், கண், காது மூக்கு தொண்டை மற்றும் தோல் சம்பந்தமான நோய்களிற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந் நிகழ்விற்கு கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே அவர்கள் கலந்து சிறப்பித்தார்
|
|
| |
அவசர அழைப்பு இலக்கம் 09.03.2012 |
அவசர மருத்துவ அம்புலன்ஸ் சேவையைதொடர்பு கொள்ள புதிய இலகுவான தொலைபேசி இலக்கமான 110 அறிமுகப்படுத்தப்பட்டது. அவசர அம்புலன்ஸ் சேவை தொடர்பாடல்களை ஒருங்கிணைக்க பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அவசர அழைப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் உத்தியோகத்தர்கள் பயிற்சியின் பின் பணிக்கமர்த்தப்பட்டனர். எனினும் தெழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சில வலையமைப்புகளில் தொலைபேசி இலக்கம் 110 அழைக்கும்போது அனுராதனுரத்திற்கு அழைப்பு செல்வதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக தற்பொழுது அவசர மருத்துவ அம்புலன்ஸ் சேவையை அழைப்பதற்கு 021 222 5555 என்ற இலக்கத்துடனும் தொடர்புகொண்டு அவசர மருத்துவ அம்புலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அறியத்தருகின்றோம்.
|
|
|
|
Jaffna Health Services Department
|
Jaffna Health Services Department
|
Jaffna Health Services Department
பணிப்பாளர்
வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்
*************************************
பிரதிப் பணிப்பாளர்
வைத்திய கலாநிதி (செல்வி).சி.சிவராணி
*************************************
கணக்காளர்
திரு.கே.எஸ்.கஜேந்திரன்
*************************************
நிர்வாக உத்தியோகத்தர்
திருமதி.ஐ.ப.வின்சென்ற்
*************************************
தாய் சேய் நல வைத்திய அதிகாரி
வைத்திய கலாநிதி (திருமதி).ஜே.ரி.சிவசங்கர்
*************************************
|
|
|
Jaffna Health Services Department
|
|
Jaffna Health Services Department
|
Jaffna Health Services Department
ஈமெயில்
பி.சு.சே.பணிமனை ஈமெயில்
யாகூ ஈமெயில்
கூகுள் ஈமெயில்
|
|
|